அறிவன், 2025-01-22, 8:26 AM
நல்வரவு Guest | RSS

வணக்கம்....வாழிய தமிழ் மொழி வாழிய தமிழினம்.

Blog

முகப்பு » 2012 » September » 12 » உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்
4:10 PM
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்

உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் முன்நாள்தலைவரும் தற்போதய சிறப்புத்தலைவருமான தமிழ்ச்செம்மல் செல்லையா காலமானார். உலகெங்கும் கிளைகளைக் கொண்டு இயங்கிவரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றி தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் மேற்படி இயக்கத்தின் உலக மாநாட்டை சிறப்பாக நடத்தியும் அதனைத் தொடர்ந்து இயக்கத்தின் சிறப்புத் தலைவராக பொறுப்பேற்று தனது பணியை சிறப்பாக ஆற்றியும் வந்தவருமான கனடா வாழ் சின்னத்தம்பி செல்லையாவின் மறைவு உலகத் தமிழ் மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும். அவரது மறைவினால் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமானது நல்லதோர் பண்பாட்டுச் செயற்பாட்டாளரை இழந்து தவிக்கின்றது”

இவ்வாறு கனடாவில் காலமான திரு சின்னத்தம்பி செல்லையாவின் மறைவையொட்டி உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கம், இயக்கத்தின் சர்வதேச ஊடகச் செயலாளர் கனடா வாழ் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள மேற்படி இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- ஷசுமார் 25 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமானது பல ஆசிய நாடுகளில் தனது கிளைகளை நிறுவி தமிழ் பண்பாட்டையும் தமிழ் மொழியையும் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதுதான் வட அமெரிக்காவிலும் இயக்கத்தின் கிளையொன்றை நிறுவ வேண்டும் என்ற எண்ணம் இயக்கத்தின் அப்போதைய தலைவர் மலேசியா வாழ் திரு வீரப்பனாருக்கு தோன்றியது.

அதன்படி 1996ம் ஆண்டளவில் கடனாவில் இயக்கத்தின் கிளையொன்றை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்பாடுகள் ஆரம்பமாகின. அப்போது கனடா வாழ் தமிழ் மக்கள் பலர் மிகுந்த ஆர்வத்தோடும் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்று காரணமாகவும் இயக்கத்தின் கிளையை ஆரம்பிக்கும் முதல் முயற்சிகளில் இறங்கி வேலைசெய்தனர்.

அப்போது நூற்றுக்கணக்கானவர்கள் அந்த ஆரம்பக் கூட்டங்களில் கலந்து கொண்டாலும், திரு சின்னத்தம்பி செல்லையா அவர்களே மேற்படி உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பலரும் வியக்கும் வண்ணம் இவரது தெரிவு அமைந்தாலும் அவர் பிறர் வியக்கும் வண்ணம் தலைவர் பதவியிலிருந்து பணியாற்றுவார் என்பதை எதிர்பார்;க்கவில்லை.

காலங்கள் கடந்து சென்ற நிலையில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச மாநாடு ஒன்றை கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் தலைநகரான ரொரென்ரோவில் நடத்த வேண்டும் என்ற தீர்மானம் அகிலச் செயற்குழுவால் எடு;க்கப்பட்டபோது, அதை வெற்றிகரமாக நடத்தி முடிப்போம் என்று முழக்கமிட்ட கிளைத் தலைவர் திரு சின்னத்தம்பி செல்லையா அவர்கள் அந்த மாநாட்டை மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.

இது வரை தமிழ் மொழியின் முழக்கம் இடம்பெறாத ரொரொன்ரோ மாநகரின் மத்தியில் தமிழ் மொழியின் சிறப்புக்களை உச்சரித்த வண்ணம் 1996ம் ஆண்டு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு ஒன்றை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர் திரு சின்னத்தம்பி செல்லையா அவர்களே ஆகும்.

அதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்கா, மலேசியா போன்ற நாடுகளில் நடைபெற்ற மாநாடுகளில் அகிலத் தலைவராக இருந்து சிறந்த முறையில் மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியவர் திரு சி. செல்லையா என்றால் அது மிகையாகாது.

திரு செல்லையா அவர்கள் இலங்கையில் தான் வகித்த அரச நிர்வாக பதவிகள் மூலம் அடைந்த பதவியுயர்வுகள் எண்ணற்றவை. அமைச்சர்கள் பலரிடமிருந்து பெற்ற பாராட்டுக்கள் பல.

இவ்வாறான அனுபவத்தோடு கனடாவிற்கு வந்து உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தில் இணைந்து பின்னர் அதன் தலைவராகவும் சிறப்பு|த் தலைவராகவும் ஆற்றிய பணிகளை நமது மக்கள் அறிந்திரா விட்டாலும் அவை போற்றுதற்குரியவை.

அவரது மறைவினால் துயருற்று இருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைச் செயலகம் தனது அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கின்றது”.
பார்வைகள்: 581 | Added by: magickousi | Rating: 0.0/0
Total comments: 0
Name *:
Email *:
Code *:
உள்னுழை
                  Thiratti.com Tamil Blog Aggregator
தேடல்
விழியம்