அறிவன், 2025-01-22, 4:51 AM
நல்வரவு Guest | RSS

வணக்கம்....வாழிய தமிழ் மொழி வாழிய தமிழினம்.

தமிழ் மாதம்

தைபிறந்தால் வழிபிறக்கும்..

தமிழர்வாழ்வில் வளம்கொழிக்கும்..

மாசியில் மங்களஞ்சூடிடும்..

புதுவரவுகள் பொங்கிடும்..

பங்குனியில் ஊரெங்கும் திருவிழா..

தெருவெங்கும் தேரோட்டம்..

சித்திரைவெயிலை இளநீர் பதநீர் தணிக்க..

சித்திரைவிழாக்கள் கோலாகலமாகும்..

வைகாசியில் வைபோகம்..

கன்னியரும் காளையரும்

மணமாலைகள்சூடிட மங்களமாகிடும்..

ஆனியில் உச்சிவெயில் தணியும்..

ஊரெல்லாம் மெல்லிய தென்றல் வீசும்..

ஆடியில் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிடும்..

உழவு ஆடிப்பட்டந் தேடி விதைக்கும்..

ஆவணிவந்ததும் நல்வரவும் வந்திடும்..

தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நிகழ்ந்திடும்..

புரட்டாசிவிரதம்.. மாந்தரின்

மனதை பக்குவப்படுத்த உதவிடும்..

ஐப்பசிமழை அடைமழை..

ஊரெல்லாம் தீவுபோல் காட்சியளிக்கும்..

கார்த்திகையில் இல்லந்தோறும் அகல்விளக்கு

ஒளிர்ந்திட..

நன்மைகள் குடிபுகுந்திடும்..

மார்கழிகுளிரில்.. வாசல்களில் கோலங்களும்

வயல்களில் வசந்தங்களும் பூத்திருக்கும்..

புகைப்படம்: தைபிறந்தால் வழிபிறக்கும்..
தமிழர்வாழ்வில் வளம்கொழிக்கும்..
மாசியில் மங்களஞ்சூடிடும்..
புதுவரவுகள் பொங்கிடும்..
பங்குனியில் ஊரெங்கும் திருவிழா..
தெருவெங்கும் தேரோட்டம்..
சித்திரைவெயிலை இளநீர் பதநீர் தணிக்க..
சித்திரைவிழாக்கள் கோலாகலமாகும்..
வைகாசியில் வைபோகம்..
கன்னியரும் காளையரும்
மணமாலைகள்சூடிட மங்களமாகிடும்..
ஆனியில் உச்சிவெயில் தணியும்..
ஊரெல்லாம் மெல்லிய தென்றல் வீசும்..
ஆடியில் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிடும்..
உழவு ஆடிப்பட்டந் தேடி விதைக்கும்..
ஆவணிவந்ததும் நல்வரவும் வந்திடும்..
தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நிகழ்ந்திடும்..
புரட்டாசிவிரதம்.. மாந்தரின்
மனதை பக்குவப்படுத்த உதவிடும்..
ஐப்பசிமழை அடைமழை..
ஊரெல்லாம் தீவுபோல் காட்சியளிக்கும்..
கார்த்திகையில் இல்லந்தோறும் அகல்விளக்கு
ஒளிர்ந்திட..
நன்மைகள் குடிபுகுந்திடும்..
மார்கழிகுளிரில்.. வாசல்களில் கோலங்களும்
வயல்களில் வசந்தங்களும் பூத்திருக்கும்..

உள்னுழை
                  Thiratti.com Tamil Blog Aggregator
தேடல்
விழியம்