வியாழன், 2024-04-18, 3:05 AM
நல்வரவு Guest | RSS

வணக்கம்....வாழிய தமிழ் மொழி வாழிய தமிழினம்.

சுற்றுலா

ஈரோடு மாவட்டம் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ளது அந்தியூர் வனம், இந்த அடர் வனத்தில் ஈரட்டி என்ற கிராமத்தை இங்குள்ளவர்களே அநேகம் பேர் அறிந்திருக்கமாட்டார்கள். இந்த மழை கிராமத்தில் இருந்து 2 கிலோமீட்டர் காட்டில் நடந்து செல்ல வேண்டும் அவ்வாறு செல்லும் போது, இயற்கையின் அற்புதமான கொடை என்று சொல்லும் ஓர் எழில் மிகு பச்சைபசேல் என்ற காட்டினுள் அமைந்துள்ளது ஓர் நீர்வீழ்ச்சி. அநேகம்பேர் அறியாத இந்த நீர்வீழ்ச்சிக்கு இந்த முறை பயணக்கும் வாய்ப்பும், அதில் ஆனந்த நீராடும் வாய்ப்பும் எனக்கு கிட்டியது.

காடுகளில் பல நல்ல இயற்கை இலைகள் மீது பட்டு மேடு பள்ளங்களை கடந்து ஓடையாக உருவெடுக்கிறது சில நீர் ஆதாரங்கள். அது மட்டுமல்லாமல் பல இடங்களில் சுனைகளில் இருந்து நீர் பெருகி அடர் வனத்தில் இருந்து பல ஓடைகள் வருகின்றன.

இந்த ஓடைகள் எல்லாம் ஒன்றினைந்து சிறிய ஆறாக உருவெடுக்கிறது இதை காட்டாறு என்று சொல்கின்றனர். இந்த காட்டாறு ஓர் இடத்தில் இயற்கையாக அமைந்த பாறையின் மேல் விழுந்து சிறு நீர்வீழ்ச்சியாக உருவெடுக்கிறது. இந்த காட்டாறில் உள்ள மூலிகை நீரும், சுமார் 20 அடி உயரத்தில் இருந்து விழும் நீர்விழ்ச்சி தண்ணீர் நம் மேல் படும் போது, நம்மை அறியாமல் நம் உடல் புத்துணர்வு பெறுகிறது.

சுமார் 1 மணி நேரம் இந்த நீரில் நீராடிய எங்களை மேலும் புத்துணர்வாக்கியது இந்த ஈரட்டி நீர்வீழ்ச்சி..

அதிக பேர் பயன்படுத்தாமல் இருப்பதால் சுற்றுச்சுழல் மாசின்றி அழகாகவும், சுத்தமாகவும் இருக்கிறது இந்த சிறிய நீர்வீழ்ச்சி...

வாய்ப்பிருப்பவர்கள் சென்று வாருங்கள்.. அந்தியூர் மலைப்பகுதியில் ஈரட்டி என்ற ஊரில் அமைந்து உள்ளது,

இதை ஈரட்டி நீர்வீழ்ச்சி என்று அழைக்கின்றனர்...

குறிப்பு: செல்லும் வாய்பிருப்பவர்கள் ப்ளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல், இயற்கையை ரசித்து, ருசித்து அனுபவிக்க வேண்டுகிறேன்...

அந்தியூரில் இருந்து ஈரட்டிக்கு பஸ் வசதி உண்டு...

உள்னுழை
                  Thiratti.com Tamil Blog Aggregator
தேடல்
விழியம்