செவ்வாய், 2024-06-25, 6:26 PM
நல்வரவு Guest | RSS

வணக்கம்....வாழிய தமிழ் மொழி வாழிய தமிழினம்.

நோய்

சென்ற போஸ்டின் “கதை கதையாம்; காரணமாம்” தொடர்ச்சி... (https://www.facebook.com/photo.php?fbid=497926500337754&set=a.109234725873602.10012.100003612254243&type=1&relevant_count=1) தமிழில் ஒவ்வொரு சொல்லும் ஆழ்ந்த பொருள் கொண்டது. சான்று – என்பது ஆதாரம் அல்லது சாட்சி. அப்படியானால், சான்றோர் யார்? சாட்சியளிப்பவர்கள் – ஆதாரம் தருபவர்கள் சான்றோர்கள்! எதற்கு ஆதாரம்? உண்மைக்கு! இயற்கை விதிகளை – உண்மைகளை உணர்ந்து அவற்றை பிறருக்கு சாட்சியாக நின்று விளக்குபவர்கள் சான்றோர்கள். ‘ஒரு தாய் – தன் மகனை ஈன்ற பொழுதை விட, அவன் சான்றோன் என கேட்கும் போது மகிழ்ச்சியடைவாள்’ – என்பது திருக்குறள். அப்படி – மருத்துவ உலகின் உண்மைகளை உணர்ந்து அவற்றின் சாட்சியாய் தாங்களே நின்று விளக்கிய சான்றோர்களை நாம் தெரிந்து கொள்வது அவசியம். இன்றைய மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படைக் கொள்கையான கிருமிகள் கோட்பாடு (Infection Theory) பற்றி சான்றோர்கள் என்ன சொல்கிறார்கள்? டாக்டர். ஆண்டனி பீச்சாம்ப் – ஒரு ஆய்வின் போது மிக நுண்ணிய உயிர்கள் உடலில் இருப்பதைக் கண்டுபிடித்தார். உடலின் உயிரணுக்களிலிருந்து வேறுபட்ட இவ்வகை நுண்ணுயிர்கள் எப்படி உடலில் தோன்றின? என்று தன் ஆய்வைத் தொடர்ந்தார். இந்த நுண்ணுயிர்களுக்கு மைக்ரோசைமாஸ் (Microzymas) என்று பெயரிட்டார். இதற்குப் பின்பு லூயிஸ் பாஸ்டர் 1864 இல் உடலில் காணப்படும் நுண்ணுயிர்கள் – கிருமிகள் என்றும் – அக்கிருமிகளே நோய்களைத் தோற்றுவிக்கின்றன என்றும் கூறினார். இதை நிரூபிக்கும் விதமாக பாரீஸ் வியன்னா பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வை நடத்தினார் பாஸ்டர். மாமிசத் துண்டு ஒன்று திறந்த காற்றில் வைக்கப்பட்டது. பல மணி நேரங்களுக்குப் பின்பு – அது அழுகி நோயுற்று இருந்தது. அதில் பலவகைக் கிருமிகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. “நோய்களுக்குக் காரணம் – கிருமிகள்! ஒவ்வொரு கிருமியும் – ஒவ்வொரு நோயை ஏற்படுத்தும் சக்தி படைத்தது. இக்கிருமிகள் காற்று, நீர் போன்றவை மூலமாக உடலின் உள்ளே புகுகின்றன” என்று லூயிஸ் பாஸ்டர் அறிவித்தார். இது தான் கிருமிக் கொள்கை (Infection Theory) எனப்படுகிறது. முதன்முதலில் கிருமிகளைக் கண்டுபிடித்த டாக்டர். பீச்சாம்ப் இக்கொள்கையை முற்றிலும் நிராகரித்தார். அதே 1864 – இல் பாரீஸ் வியன்னா பல்கலைக் கழகத்தில் ஆய்வு ஒன்றை நடத்தினார். ஒரு மாமிசத் துண்டை காற்றுப் புகாத கண்ணாடிப் பெட்டியில் வைத்தார். பல மணி நேரங்கள் கழித்து அது அழுகி, நோயுற்று இருந்தது. கிருமிகளும் காணப்பட்டன. “காற்றின் வழியே கிருமிகள் வருகின்றன என்றால், காற்றே புகாத இந்தப் பெட்டிக்குள் எப்படி கிருமிகள் வந்தன?” – என பாஸ்டருக்கு சவால் விடுத்த பீச்சாம்ப், தொடர்ந்து தன் ஆய்வுகளின் முடிவை வெளியிட்டார். “உடலில் தேங்கியிருக்கும் கழிவுப் பொருட்களிலிருந்து கிருமிகள் உருவாகின்றன. இக்கிருமிகள் கழிவுகளை உணவாக உட்கொண்டு உடலிற்கு நன்மை செய்கின்றன. ஒரு கட்டத்தில் கழிவுகள் தீர்ந்த நிலையில் – கிருமிகள் தானே அழிந்து விடுகின்றன” – என்பதே அவர் வெளியிட்ட முடிவாகும். இதே கொள்கைதான் – உலகமெங்கும் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய மருத்துவங்களின் ‘லிக்கோ கோட்பாடு’ என்று அழைக்கப்படுகிறது. மேற்கண்ட ஆய்வுகளுக்குப் பின்பும், டாக்டர். பீச்சாம்ப் புதிய புதிய ஆய்வுகள் மூலம் 1869 – இல் தன் கருத்துகளுக்கு வலுவூட்டினார். கிருமிகள் பற்றி துவங்கப்பட்ட இப்படியான ஆய்வுகள் உலகம் முழுக்கப் பரவின. பெரும்பாலான மக்களால் பின்பற்றப்பட்டு வந்த ஆங்கில மருத்துவம் – இதே காலத்தில் ஹோமியோபதியின் வருகையால் பெரிதும் பாதிப்பிற்கு உட்பட்டது. ஆங்கில மருத்துவ நிபுணர்கள் கூட்டம் கூட்டமாக டாக்டர். ஹானிமனின் (ஜெர்மனி) ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர். இக்காலகட்டத்தில் லூயிஸ் பாஸ்டரின் கிருமிக் கொள்கை ஆங்கில மருத்துவத்திற்கு புத்துயிர் ஊட்டியது. இக்கொள்கைக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் அக்கால ஆங்கில மருத்துவர்கள் முற்றாக புறக்கணித்தனர். என்றாலும் – ஆய்வுகளின் முடிவுகள் கிருமிகளுக்கு எதிரானதாகவே இருந்தன. 1892 – இல் டாக்டர். பெட்டின் காபர் (பவேரியா) கிருமிகளை தன் உணவில் கலந்து உட்கொண்டார். எவ்விதமான பாதிப்புமின்றி, இதே பரிசோதனையை மீண்டும் மீண்டும் பல்கலைக் கழகங்களில் நிகழ்த்திக் காட்டினார். டாக்டர். ரேடர்மண்ட் விஸ்கான் – அம்மைக் கிருமிகளை அதிக அளவில் ஊசி மூலம் தன் உடலில் ஏற்றிக் கொண்டார். எவ்வித விளைவுகளும் இன்றி ஆய்வில் வெற்றி பெற்றார். 1916 இல் டாக்டர். ஜான் பி.பிஃரேசர் (கனடா) கழிவுகளிலிருந்துதான் கிருமிகள் உருவாகின்றன என்று நிரூபித்து – THE LANCET மருத்துவ இதழில் விளக்கினார். 1928 இல் டாக்டர். எம். பெட்டோ பேலீ ‘கிருமிக் கொள்கையின் பொய்மை’ என்று தொடர் உரை நிகழ்த்தினார். தடுப்பூசிக்கு எதிரான இயக்கம் (Anti Vaccination Leaque) இக்காலத்தில் வலுவடைந்தது. டக்லஸ் ஹ்யூம் – ‘பீச்சாம்ப் அண்டு பாஸ்டர்’ என்ற நூலை வெளியிட்டார். ...இவ்வாய்வுக்களின் நிறைவுத் திருப்பமாக லூயிஸ் பாஸ்டரின் வழிவந்த டாக்டர் கோஜிகோ (பிரான்ஸ்) தடுப்பூசி பற்றிய ஆய்வில் – “ஒரு உயிருள்ள உடலில் கிருமிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமாகவும் – வெற்றி பெறும் வகையிலும் உள்ளது” – என்று தெரிவித்தார். லூயிஸ் பாஸ்டர் தன் மரணப் படுக்கையில் இருந்த போது “உடல் தான் எல்லாமே; கிருமிகள் ஒன்றுமில்லை” (Tissue is everything; Germ is nothing) – என்று தன் ஆய்வுகளுக்கு எதிரான கருத்தைத் தானே வெளியிட்டார். ஆய்வுகளும் – முடிவுகளும் ஒருபுறம் இருக்க, ஆங்கில மருத்துவம் அதன் போக்கில் தொடர்ந்தது. 1929 – இல் கிருமிகளைக் கொல்லும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது. முதல் உயிர்க்கொல்லி மருந்தை (பென்சிலின்) அலெக்ஸாண்டர் பிளமிங் வெளியிட்டார். 1908 – இல் ராபர்ட் ஹூக் நோய்களையும் – கிருமிகளையும் பட்டியலிட்டார். அதே ஆண்டில் வெளிவந்த ‘தி லாண்செட்’ மருத்துவ இதழ் – “ராபர்ட் ஹூக்கின் முன்பின் தொடர்பற்ற இக்கண்டுபிடிப்பு பொருத்தமானதாக இல்லை” என்று விமர்சித்தது. உயிர்க்கொல்லி மருந்துகள், தடுப்பூசிகள்... என வளர்ந்துள்ள கிருமிக் கொள்கை, இன்று வரையும் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது. நமது பல்கலைக்கழகங்களும் – கிருமிக் கொள்கை ஆங்கில மருத்துவ பாடமாகவும், கிருமி எதிர்ப்புக் கொள்கையை மாற்று[பாரம்பரிய] மருத்துவ பாடமாகவும் நடத்திக் கொண்டிருக்கிறது. மன்னராட்சிக் காலத்தில், அரசர் எம்மதத்தை சார்ந்து இருக்கிறாரோ அதே மதத்தை மக்களும் சாந்திருப்பார்கள் அதே போல, இக்காலத்தில் அரசு ஆங்கில மருத்துவத்தை ஆதரித்து முழுமையாக பயன்படுத்தி வருவதால், மக்களும் அதனையே பின்பற்றி வருகிறார்கள். ஒரே பல்கலைக்கழகம் இருவேறு விதமான கொள்கைகளைக் கற்பித்து வருகிறது. அதை வெறும் பாடமாக பெயரளவில் மாணவர்களும் படித்து வருகிறார்கள். நேரெதிரான இரண்டு விஷயங்களில் எது உண்மை என்று ஆய்ந்து – உணரும் தன்மை இப்போது குறைந்து வருகிறது. ஆங்கில மருத்துவம் – கிருமிக் கொள்கையை எந்த அளவிற்கு பரப்பி வருகிறதோ, அதே அளவிற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பும் இருந்து கொண்டே இருக்கிறது. இப்போது – கிருமி என்பது மருத்துவதத்தைக் கடந்து வியாபாரமாக்கப்பட்டுவிட்டது. “வாய் துர்நாற்றம் – கிருமிகளால் ஏற்படுகிறது. எனவே கிருமிகளை அழிக்கும் (அதாவது உயிர்களைக் கொல்லும்) எங்கள் பற்பசைகளைப் பயன்படுத்துங்கள்” என்று கூறுகிறது – ஒரு வணிக நிறுவனம். “வியர்வை நாற்றமா? – காரணம் கிருமிகள்; எங்கள் சோப்பை பயன்படுத்துங்கள். கிருமிகள் அழியும்” என்று விளம்பரப்படுத்துகிறது இன்னொரு நிறுவனம். டாக்டர். ஹென்றி லிண்ட்லார் கூறுகிறார் – “நோய்கள் இந்தக் கிருமிகளாலேயே ஏற்படுகிறது என்றால் – மனித சமுதாயம் முழுமையும் இக்கிருமிகளிடம் உயிர் பிச்சைக்காக கையேந்தி நிற்க வேண்டியது தான்.” இன்றும் கூட, தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் மொத்தமாக இறந்த பின்புதான் அது செய்தியாக வெளிப்பட்டது. தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக லட்சக்கணக்கான குழந்தைகள் பாதிப்படைந்துள்ளன. கிருமிக் கொள்கையிலேயே சந்தேகம் இருக்கும் போது, அவற்றைக் கொல்ல தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது சரியா? இது ஒருபுறம் இருக்க, நாம் கிருமிகளைப் பற்றி விளங்கிக் கொள்வோம். நாம் உடலின் இயற்கை விதிகளை மீறும் போது, கழிவுகள் உண்டாகின்றன. தேங்கிய கழிவுகள் உள்ளுறுப்புக்களின் இயக்கத்தை பாதிக்கிறது. எதிர்ப்பு சக்தியை மீண்டும் பெற்ற பின்பு உடல் தேங்கிய கழிவுகளை வெளியேற்ற முயல்கிறது. நாம் ரசாயன நச்சுப் பொருட்களை [மருந்துகள்/மாத்திரைகள்/ஊசிகள்] உட்கொண்டு கழிவுகளை வெளியேற விடாமல் பாதுகாக்கிறோம்.தேக்கமுற்று, பெருக்கமடையும் கழிவுகளை நேரடியாக வெளியேற்ற முடியாதவாறு நாம் ரசாயனங்களைக் கொண்டு தடுக்கிறோம். அதற்காக, கழிவுகளை உடல் ஏற்றுக் கொள்ளுமா? கழிவுகள் உடலிற்கு கேடு விளைவிப்பவை; எனவே உடல் ஒருபோதும் கழிவுகளை உள்ளே வைத்துக் கொள்ளாது. கழிவுகளை வெளியேற்ற முடியாத நிலையில், உடல் கழிவுகளை நீக்க இன்னொரு வழியைக் கண்டுபிடிக்கிறது. அது தான் – கிருமிகள்! கழிவுகளிலிருந்தே கிருமிகள் உருவாகின்றன. கழிவுகளையே உட்கொள்கின்றன. எப்படி கழிவுகளிலிருந்து கிருமி உருவாகும்? ரோட்டில் ஒரு நாய் செத்துக் கிடக்கிறது. அதன் தசைகள் – நாளாக நாளாக அழுகத் தொடங்குகிறது. அழுகிய அந்த தசைகளிலிருந்து – புழுக்கள் உருவாகின்றன. புழுக்கள் அதிலேயே உருவாகின்றதா? அல்லது வெளியிலிருந்து வருகிறதா? அழுகிய தசையிலிருந்து புழுக்கள் பிறக்கின்றன. அவை - அழுகிய தசைகளையே உணவாக உண்கிறது. ஒன்றிரண்டு நாளில் அழுகிய தசைகள் அனைத்தையும் புழுக்கள் சாப்பிட்டுவிடுகின்றன. அழுகிய தசைக் கழிவுகள் தீர்ந்து போன நிலையில் புழுக்கள் உணவின்றி தானே அழிகிறது. இங்கே புழுக்கள் ஏன் உருவாயின? - அழுகியவற்றை உண்பதற்கு. எங்கிருந்து உருவானது? - அழுகியவற்றிலிருந்தே! புழுக்கள் எப்படி காணாமல் போனது? - கழிவுகள் இல்லாமல் உணவின்றி அழிந்து போனது. இதே போல இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம். நம் வீடுகளில் மசாலாப் பொடி. மிளகாய்ப் பொடி போன்றவற்றை தனித்தனி டப்பாக்களில் இறுக மூடி வைத்திருப்போம். அந்த மசாலா பொருட்களை நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல், பின்பு அவற்றை திறந்து பார்த்தால் எப்படி இருக்கும்? மசாலாப் பொருட்களில் புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கும். புழுக்கள் இறுக மூடிய டப்பாவிற்குள் எப்படி வந்தது? கெட்டுப் போன பொருட்களிலிருந்து புழுக்கள் தானே உருவாகின்றன. நாம் பொதுவாக – புழுக்கள் வந்தால் தான் பொருட்கள் கெட்டுப் போனதாக நினைத்துக் கொள்கிறோம். ஆனால் உண்மை என்ன? கெட்டுப் போனதால் தான் புழுக்கள் வந்தன. இதே போன்று தான் நம் உடலிலும்! கழிவுகள் அளவுக்கதிகமாகத் தேங்கும் போது, அவற்றிலிருந்து கிருமிகள் உருவாகின்றன. அக்கழிவுகளையே உணவாக உண்டு பெருகுகின்றன. கழிவுகள் தீர்ந்த நிலையில் – கிருமிகள் தானே செத்து மடிகின்றன. அப்படியானால் கிருமிகள் எங்கிருந்து வந்தது? வெளியிலிருந்தா? - இல்லை. உள்ளிருந்துதான் உருவாகின்றன. உருவான பின்பு என்ன செய்கிறது? - கழிவுகளை உண்டு தீர்க்கிறது. கழிவுகளைத் தீர்ப்பது உடலிற்கு நல்லதா? கெட்டதா? - மிகவும் நல்லது. அப்படியென்றால் – கிருமிகள் உடலிற்கு தீங்கு விளைவிக்குமா? - நன்மை பயக்குமா? சந்தேகமில்லாமல் நன்மையை மட்டும்தான் செய்கிறது. கிருமிகள் உடலால் உருவாக்கப்பட்டவை. நாம் உடல் ரீதியாக செய்த இயற்கை விதிமீறலை சரி செய்வதற்காக தோற்றுவிக்கப்பட்டவை. ரசாயன மருந்துகளால் இக்கிருமிகளைக் கொன்றுவிட்டால் – கழிவுகள் என்ன ஆகும்? கழிவுகள் மேலும் பெருகும்; எதிர்ப்பு சக்தி மீண்டும் சமநிலைப்படும் போது – மீண்டும் கிருமிகள் உருவாகும். ஒரு தேங்கிய சாக்கடை இருக்கிறது; அதைச் சுற்றி ஏராளமான கொசுக்களும் இருக்கின்றது. இந்த கொசுக்களை விரட்ட – நாம் என்ன செய்யலாம்? 1. கொசு மருந்து அடித்து கொசுக்களைக் கொள்ளலாம். (ஆனாலும் கழிவுகள் (சாக்கடை தேக்கம்) இருக்கும் வரை மீண்டும் கொசுக்கள் வரும்.) 2. சாக்கடையை சுத்தப்படுத்தலாம். இரண்டில் எது சரி? அங்கே கொசுக்கள் பெருகக் காரணமே – தேங்கிய சாக்கடைதான்! சாக்கடை கொசுக்களின் தாய். கொசுக்களை மீண்டும் மீண்டும் அழிப்பது வீணான வேலை. சாக்கடையை சுத்தப்படுத்தினால் கொசுக்கள் தானே போய்விடும். இதே போல... கிருமி உருவாகக் காரணம் கழிவுகள்! நாம் – கிருமிகள் தான் கழிவுகளை ஏற்படுத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். கழிவுகளை நீக்கினால் – கிருமிகள் அழிந்து போகும். கிருமிகளை மட்டும் நீக்கினால் – கழிவுகள் அப்படியே தான் இருக்கும்! கிருமிகள் மீண்டும் உருவாகும். அப்படியானால்... கிருமிகள் பொய்யா...? இல்லை; கிருமிகள் இருப்பது உண்மைதான். ஆனால் – அவற்றால் நோய் ஏற்படுவதில்லை; பரவுவதும் இல்லை. உலகம் முழுவதும் கடவுள் பயத்தை விட, கிருமி பயம் தானே அதிகமாக இருக்கிறது? இன்று – உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய்கள் அனைத்தும் கிருமியைக் கொண்டு கட்டமைக்கப்படுகிறது. உதாரணமாக – எய்ட்ஸ் (AIDS) இந்நோய் ஏற்படக் காரணம் என்று கூறப்படும் கிருமி – H.I.V. (Human Immuno Deficiency Virus) எய்ட்ஸைப் பற்றி உலகத்தை பயமுறுத்தத் துவங்கிய அரசாங்கங்களைப் பார்த்து 1990 –களில் கருத்து தெரிவித்தார் ஒரு அறிஞர். யார் அவர்? சுவிஸ் செஞ்சிலுவைச் சங்க ரத்த வங்கியின் இயக்குனரும், பெர்ன் பல்கலைக் கழகத்தின் நோய் எதிர்ப்பாற்றல்துறையின் சிறப்பு பேராசிரியருமான டாக்டர். ஆல்ப்ரெட் ஹாஸ்ஸிக். என்ன கூறுகிறார்? “எய்ட்ஸ் உயிர்க் கொல்லி நோய் என்று பிரச்சாரம் செய்வதை ஒழிக்க வேண்டும்” - சண்டே டைம்ஸ், லண்டன் (3.4.1994). உலகத்தின் சிறந்த மருத்துவ அறிவியலாளர்கள் சிலரின் கருத்துக்களையும் நாம் தெரிந்து கொள்வோம். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் மரபணுக்கள் துறை பேராசிரியர் டாக்டர். ஹாரி ரூபின் கூறுகிறார்.. “எய்ட்ஸுக்கு காரணம் HIV கிருமி தான் என்பதை நிரூபிக்க முடியவில்லை” - சண்டே டைம்ஸ், லண்டன் (3.4.1994). இன்னும், மரபணு உயிரியல் துறையைச் சார்ந்த பேராசிரியர். ஹார்லி பியாலி கூறுகிறார். “HIV என்பவை மிகச் சாதாரணமான கிருமிகள். விஞ்ஞானிகள் கூறும் அசாதாரணமான விளைவுகள் HIV கிருமிகளால் ஏற்படுவது சாத்தியமே இல்லை” - ஸ்பின், ஜூன் 1992. 1980 ஆம் வருட மருத்துவ ரசாயனத்துறை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவரும், மரபணுத்துறை பேராசிரியருமான டாக்டர். வால்டர் கில்பர்ட் கூறுவதையும் கேட்போம். “எய்ட்ஸ் நோய்க்கு HIV வைரஸ் காரணமல்ல; மற்ற ஏதேனும் காரணங்களால் எய்ட்ஸ் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” - ஆம்னி, ஜூன் 1993. பல்வேறு மருத்துவ அறிஞர்களின் கருத்துக்கள் எய்ட்ஸைப் பற்றிய உண்மைகளைப் புரிய வைக்கிறது. இவற்றை விட, HIV என்ற கிருமியை முதன்முதலில் கண்டுபிடித்த – பாரீஸ் பாஸ்டர் கல்லூரியின் கிருமியியல் துறை பேராசிரியர் டாக்டர். லுக்மோன் பிக்னியர் (Dr. Luc Monfagnier) கூறுவதைக் கேட்டால் – இந்த விஷயம் நிறைவடையும். “HIV- எய்ட்ஸுக்கு காரணமல்ல; இதைப்பற்றிய ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளில் எக்கச்சக்கமான குளறுபடிகளும், பித்தலாட்டங்களும் உள்ளன” - மியாமி ஹெரால்டு, (23.12.1990). எந்த விஷயம் வணிக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் லாபத்தைத் தருமோ, அந்தக் கருத்துக்கள் மட்டுமே மக்களுக்குப் பரப்பப்படுகிறது. ஆனால், உண்மை என்பது எப்போதும் இருந்து கொண்டிருக்கும். தேடலும், சிந்தனையும் உடையவர்கள் உண்மையைக் கண்டுணர்வார்கள். உடலில் தோன்றும் எந்த வித நோயாக இருந்தாலும் – கழிவுகளின் தேக்கமே காரணமாக உள்ளது. உடலில் கழிவுகள் உருவாக அடிப்படைக் காரணம் நம்முடைய இயற்கை விதி மீறல் மட்டும் தான்! கிருமிகளைப் போலவே – கூறப்படும் புறக்காரணங்கள் அனைத்தும் பொய்யானவை. நாம் இப்படி புறக்காரணங்களின் பின்னால் ஆராய்ச்சி செய்து கொண்டு சென்றால் – எக்காலத்திலும் நோய்கள் தீராது. ஒரு பொருளை வீட்டிற்குள் மறந்து வைத்து விடுகிறோம். வெளியே தேடத் துவங்குகிறோம். இத்தேடல் எப்போது முடியும்? வெளியெல்லாம் தேடிவிட்டு வீடு திரும்பும்போது! அப்படித்தான் நம் புறக்காரணங்களும். உடலின் வெளியே நாம் தேடும் காரணங்களில் உண்மை இல்லை. எனவே, வீடு திரும்புகிறோம். நம் உடல் விதி மீறலை நாம் உணர்ந்து கொண்டாலே, கழிவுகள் தேக்கத்திலிருந்து உடலைக் காக்க முடியும்..! Googleல் Louis Pasteur vs. Antoine Bechamp என்று சர்ச் செய்து பாருங்கள் இன்னும் பல கட்டுரை ஆதாரங்கள் கிடைக்கும்... உடலின் உண்மையான இயக்கத்தை உணர “உங்களுக்குள் ஒரு மருத்துவர்” என்ற இந்த புத்தகம் உங்களுக்கு உதவும்... https://www.facebook.com/notes/rk-acu/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/496743117122759 நாம் ஏற்கனவே “நோய்க்குக் காரணம் கிருமிகளல்ல..! இது மருத்துவத்தின் ஒரு வியாபார தந்திரம் மட்டுமே...?” என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை போஸ்டு செய்துள்ளோம்.. https://www.facebook.com/photo.php?fbid=146009968862744&set=pb.100003612254243.-2207520000.1406181374.&type=3&src=https%3A%2F%2Fscontent-a-ams.xx.fbcdn.net%2Fhphotos-frc3%2Fv%2Ft1.0-9%2F578152_146009968862744_800799316_n.jpg%3Foh%3Dd1508cc46477af548f900073c0f9ec9e%26oe%3D54350572&size=600%2C450 அப்படி என்றால், கிருமிகளை கொல்ல ஆன்டிபயாட்டிக் சாப்பிட்டால் என்ன நடக்கும்...! “ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கிருமிகளைக் கொல்லாது; உங்களைத்தான் கொல்லும்!!!” என்னும் தலைப்பில் டாக்டர். ஃபஸ்லூர் ரஹ்மான், MBBS., MD., DV. Ph.D., அவர்களின் கட்டுரை தொகுப்பு... https://www.facebook.com/photo.php?fbid=477533895710348&set=pb.100003612254243.-2207520000.1406181363.&type=3&src=https%3A%2F%2Ffbcdn-sphotos-a-a.akamaihd.net%2Fhphotos-ak-xpf1%2Ft31.0-8%2F1491399_477533895710348_785006490173049134_o.jpg&smallsrc=https%3A%2F%2Ffbcdn-sphotos-a-a.akamaihd.net%2Fhphotos-ak-xpa1%2Ft1.0-9%2F10380769_477533895710348_785006490173049134_n.jpg&size=1024%2C768 அப்போ கிருமிகள் தத்துவத்தை அடிப்படையாக கொண்ட தடுப்பூசிகள் நம் உடலில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்...? “சொட்டுமருந்தும், தடுப்பூசியும் மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள்” கட்டுரை இந்த லிங்கில் படிக்கலாம்... https://www.facebook.com/photo.php?fbid=490184961111908&set=a.109234725873602.10012.100003612254243&type=1 டாக்டர். ஃபஸ்லூர் ரஹ்மான், MBBS., MD., DV. Ph.D., அவர்களின் “பி.சி.ஜி. தடுப்பு ஊசி ஒரு மிகப் பெரும் சமுதாயத் துரோகம்” கட்டுரையை இங்கு படிக்கலாம்... https://www.facebook.com/photo.php?fbid=486493561481048&set=pb.100003612254243.-2207520000.1406181362.&type=3&src=https%3A%2F%2Fscontent-a-ams.xx.fbcdn.net%2Fhphotos-xaf1%2Ft31.0-8%2F10320985_486493561481048_1319620558005840426_o.jpg&smallsrc=https%3A%2F%2Fscontent-a-ams.xx.fbcdn.net%2Fhphotos-xap1%2Fv%2Ft1.0-9%2F10421431_486493561481048_1319620558005840426_n.jpg%3Foh%3D4c66b445f2d3b921cc33f3c15374bb27%26oe%3D543979A6&size=1024%2C768 இந்த கட்டுரைகள் உங்களுக்கு வெறும் தகவல்கள் அல்ல, இந்த தகவல்களை சரியாக புரிந்து உணர்ந்துகொண்டால் அது உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாகும். மருந்துகள், மருத்துவம் அற்ற ஆரோக்ய வாழ்க்கைக்கு அது வழிகாட்டும். நாம் பிறந்தது நோய்களோடும், மருந்துகளோடும் வாழ்நாள் முழுவதும் துன்பப்பட்டு சாக அல்ல.. சுகமாகவும், ஆரோக்யமாகவும், இன்பமான வாழ்க்கையும் வாழத்தான்... அனைத்து நலன்களையும் பெற்று வாழ்க வளமுடன்...

உள்னுழை
                  Thiratti.com Tamil Blog Aggregator
தேடல்
விழியம்