ஒருவர் இல்லை இருவர் இல்லை மாறாக பல குடும்பங்கள் சிதைந்து ஓடக் காரணமாக இருந்தவன் ராஜ கம்பளத்தான் வடுக வந்தேறி கெட்டிபொம்மு நாயக்கன் ஆவான். தமிழர்களில் அவர்களால் மிகவும் பாதிப்படைந்தவர்கள் சாணார்கள் என்றழைக்கப் பட்ட நாடார்கள் ஆவார்கள். பாமினி சுல்த்தான்களை எதிர்த்து போராட வக்கின்றி தமிழகத்தில் நுழைந்த இந்த வடுகக் கூட்டம் தமிழர்களின் சாதிய மோதல்களை முதலீடுகளாக்கி குளிர் காய்ந்து பின்பு தமிழர்களையே வீழ்த்தியது. சீரிய பண்புகள் நிறைந்த தமிழ் சமூகத்தை முதல் கட்டத்தில் சிதைத்தது பார்ப்பனர் கூட்டம், அதன் பின்பு தமிழர் இனவொற்றுமையை நிர்மூலமாக்கியது வடுகரின் தெலுங்குக் கூட்டம். நிற்க.
சாணார்கள் என்றழைக்கப்பட்ட நாடார்கள் பதினேழாம் நூற்றாண்டில் வணிகத்தில் தங்களது ஆளுமையை செலுத்திய போது பாளையக்கார வடுகர்கள் அவர்களது வளர்ச்சிக்கு தடையாக இருந்தனர். தமிழர்களான மறவர்களையும், வெள்ளாளர்களையும் சாணார்களுக்கு எதிராக களமிறக்கினர். இப்படியான பணியினை பாஞ்சாலங்குறிச்சி பாளையக்கார வடுகனான கெட்டி பொம்மு நாயக்கன் செவ்வனே செய்து வந்தான். இவனால் தான் சாணார்களுக்கும் மறவர்களுக்கும் பகையே மூண்டது. இவனின் தம்பியான ஊமைத்துரை என்ற துரைசிங்க நாயக்கனால் சாணார்கள் குறிவைத்து தாக்கப் பட்டனர்.
நாடார்களை கோவில்களுக்கு அனுமதிக்க வேண்டாம் என்று ஓலைகளை சக பாளையங்களுக்கு அனுப்பி கேவலப்படுத்தியவன் கெட்டி பொம்மு ஆவான். இவனால் தாலியறுத்த சாணார் குலப் பெண்டிர் எண்ணிக்கை கணக்கிலடங்கா. இதனால் சாணார்கள் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தில் இருந்து எட்டையாபுரம் பாளையம் வந்தது வரலாறு. குடித்து கும்மாளமடித்து வாழ்ந்த எட்டப்ப நாயக்கரால் சாணார்களுக்கு பாதுகாப்பு கிட்ட வில்லை. எனவே பெரும் எண்ணிக்கையிலான சாணார்கள் கமுதி, வலையபூக்குளம், பேரையூர், நீராவி, பெருநாழி, கண்ணிராஜபுரம், சாயல்குடி, குளத்தூர், பேரிலோவன்பட்டி, வேம்பார், வேடநத்தம், பனையூர், வடமலாபுரம், பூசனூர், மாவிலோடை,மார்த்தாண்டம்பட்டி, செமப்புதூர், வேப்பலோடை, தருவைக்குளம், காட்டுநாயக்கன்பட்டி, நாகலாபுரம், மேல்மாந்தை, ஆற்றங்கரை, கல்லூரணி போன்ற கெட்டிபொம்மு நாயக்கனுக்கு அடிபணியாத ஜமீன்களில் குடியேறினர். இருப்பினும் நாடார்களைக் கண்டாலே எரிச்சலுற்ற வடுகர்கள் அவர்களை பாளையம் பாளையமாக துரத்தி அடித்தனர். கெட்டி பொம்முவை தூக்கிலிட்டபோது நாடார்கள் தங்களது ஊர்களில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். சாணார் பெண்கள் குலவையிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இப்படி ஊர் ஊராக வடுகர்களால் துரத்தியடிக்கப் பட்ட ஏதிலிகளான நாடார்கள் இன்று துளி கூட வரலாறு அறியாது விழிப்புணர்வு அற்ற நிலையில் உண்பதும் உறங்குவதுமாக இருக்கின்றனர். இவனையும் இவனது வம்சத்தாரையும் என்றுமே நாடார்களால் மன்னிக்கவே முடியாது.
|